நோக்கங்கள்
1.
அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் பயனை சிறுசேமிப்பு மூலம் பெற்றிட தமிழ்நாடு
மக்களிடையே ஏற்படுத்தி அதனை ஒவ்வொரு
குடும்பங்களுக்கும் கொண்டு செல்லுதல்.
2.
முகவர்களுக்கு இலக்கிணை நிர்ணயித்து அதனை சிறுசேமிப்பு உதவி இயக்குநர் சென்னை
மாநகராட்சி மற்றும் மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களைக்
கொண்டு ஆய்வு செய்தல்.
3.
அரசு துறைகள்,
உள்ளாட்சி நிறுவனங்கள்,
மாநில அரசு நிறுவனங்கள்,
வாரியங்கள் மற்றும் கழகங்கள் ஆகியவற்றை சிறுசேமிப்புத் திட்டப் பணியில் ஈடுபடுத்தல்.
4.
பொது மக்கள்,
மாணவ
/
மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதன் மூலமாக சேமிப்பு
மற்றும் சிக்கனத்தை குறித்த பழக்கத்தினை ஏற்படுத்துதல்.
5
அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் சிறுசேமிப்புத் திட்டங்களை சிறுசேமிப்பு
முகவர்கள் மூலமாக ஒருங்கிணைத்தல்.
6.
சிறுசேமிப்பு குறித்த தகவல்களை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பல்வேறு
பிரச்சார நாடகங்கள் மாவட்டங்களில்,
அரசு பொருட்காட்சிகளிலும், சென்னையில் அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக
பொருட்காட்சியில் பங்கேற்பது மூலமாகவும் மக்களுக்கு சிறுசேமிப்பு குறித்து
விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
7.
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை,
முகவர்கள் உள்ளாட்சி அமைப்புகள்
(2007
வரை),
முகவர்கள் ஊக்கத் தொகைத் திட்டம்
(2012
வரை)
முகவர்களுக்கு பரிசுத் திட்டங்கள் செயல்படுத்துதல்.
|